சேவைக் கட்டணங்களை நீக்கிய IRCTC
ராஜ்தானி, துரந்தோ அல்லது சதாப்தி இரயில்களில் முன்கூட்டிய ஆர்டர் செய்யாத அனைத்து உணவு மற்றும் பானங்கள் மீதான சேவைக் கட்டணங்களை நீக்கியுள்ளது.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் விடுத்துள்ள தற்போதைய சுற்றறிக்கைக்குப் பிறகு, பிரீமியம் ரயில்களில் தங்கள் உணவை முன்பதிவு செய்யாதவர்கள், டீக்கு ₹20 செலுத்துவார்கள். முன்னதாக, முன்பதிவு செய்யாத பயணி ஒருவரின் தேநீர் விலை, சேவைக் கட்டணம் உட்பட ₹70 ஆக இருந்தது.
இருப்பினும், பயணிகள் இப்போது காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலை சிற்றுண்டிகளுக்கு ₹155, ₹235 மற்றும் ₹140 செலுத்த வேண்டும், மேலும் சேவை கட்டணம் முறையே ₹105, ₹185 மற்றும் ₹90 ஆக இருந்தது.
முன்னதாக, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) பயணத்தின் போது உணவை ஆர்டர் செய்யும் போது கூடுதலாக ₹50 வசூலித்து வந்தது,