விருப்பச் செலவுகளைக் குறைத்துக் கொண்ட இந்தியர்கள்
கோவிட் லாக்டௌனால் பொருளாதார மந்தநிலை, பணவீக்கம், வேலையின்மை ஆகியவற்றால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்கள் குறைவாக செலவு செய்கிறார்கள் என்று கோத்ரெஜ் நிறுவனம் எடுத்துள்ள ஒரு கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
இந்தியர்களில் பாதி பேர் தங்களது விருப்பச் செலவுகளைக் குறைத்துள்ளனர் என்றும் FMCG துறையில் பணவீக்கத்தைக் காட்டிலும் குறைக்கப்பட்ட விருப்பச் செலவுகள் ஒரு பெரிய கவலை என்று கோத்ரெஜ் உயரதிகாரி ஒருவர் கூறினார்.
நாட்டில் பணவீக்கம் 7 சதவீதத்திற்கு அருகில் உள்ளது, அதிகரித்து வரும் தயாரிப்பச் செலவுகள் காரணமாக, பல நிறுவனங்கள் லாபத்தைத் தக்கவைக்க விலைகளை அதிகரிக்க அல்லது பேக்கேஜிங் அளவைக் குறைக்கத் தொடங்கியுள்ளன.
இதற்கிடையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.100 கோடி ரூபாவை முதலீடு செய்யப்போவதாக கோத்ரெஜ் நிறுவனம் அறிவித்துள்ளது.
நகரங்களில் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குதல், பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து மக்களுக்கு கல்வி கற்பிப்பதற்கான தகவல் தொடர்பு முயற்சிகள் மற்றும் பேக்கேஜிங்கின் மாற்று வழிகளைப் பற்றிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவை இதில் அடங்கும்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை போன்ற பரவலான ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு மத்தியில், பிளாஸ்டிக்கை தடை செய்வது தற்போதைய சவால்களுக்கு தீர்வாகாது என்று கோத்ரெஜ் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாகியுமான சுதிர் சீதாபதி சீதாபதி கூறினார்.