பிளாஸ்டிக் தடையை நீட்டிக்க இந்திய அரசாங்கம் திட்டம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதாக உறுதியளித்தபோது, உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை.
ஜூலை 1 முதல் ஸ்ட்ராக்கள் உட்பட 19 ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மாற்றத்தால் குளிர்பான பெட்டிகள் இருப்புக்கள் தீர்ந்துவிட்டதாகவும் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் உற்பத்தி செய்யப்படும் 380 மில்லியன் டன் பிளாஸ்டிக்கில் பாதி, பேக்கேஜிங், சமையலறை பொருட்கள் மற்றும் ஸ்ட்ராக்கள் போன்ற ஒற்றைப் பயன்பாட்டுப் பொருட்களுக்கானது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 14 மில்லியன் டன் பிளாஸ்டிக் கடலில் கலக்கின்றன என்று ஒரு அறிக்கை கூறுகிறது..
இந்தியாவில், சுமார் 88,000 நிறுவனங்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்கின்றன, சுமார் 1 மில்லியன் மக்கள் அதில் வேலை செய்கின்றனர் என்று ஒரு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பல அரசாங்கங்களுக்கு முக்கிய இலக்காக மாறியுள்ளன, ஏனெனில் பெரும்பாலான மக்களுக்கு அவை தேவையற்றவை. அப்படியிருந்தும், இந்தியாவில், பல நாடுகளைப் போலவே, அவை எங்கும் பரவிவிட்டன.
பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு மாற்றாகத் தயாரிக்கும் சில இந்திய ஸ்டார்ட் அப்களின் வணிகம் வளர்ந்து வருகிறது. சில நிறுவனங்கள் தென்னை மற்றும் பனை ஓலைகளில் இருந்து ஸ்ட்ராக்களைத் தயாரிக்கிறது. ஆனால் அவற்றின் விலை அதிகம். தடைக்குப் பிறகு, வாடிக்கையாளர்களின் ஆர்டர்களின் அளவு ஐந்து மடங்கு அதிகரித்து, புதிய விசாரணைகள் வருவதால் உள்நாட்டு ஆர்வம் உயர்ந்துள்ளது.
தேசம் தயாராக இல்லை என்று பல விற்பனையாளர்கள் தொடர்ந்து வாதிட்டாலும், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை நீட்டிக்க இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.