ஆயுள் காப்பீட்டு பிரிமியம் கவனிக்க வேண்டிய குறிப்புகள்
காப்பீடு தொடர்பான வழிகாட்டுதல் மற்றும் உதவிக்கு
எங்களை +91 9150087647 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்
விவரங்களைப் பகிர கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்க:
https://forms.gle/BEjApXuDfNWRrLZKA
ஒரு குடும்பம் தன்னுடைய செலவுகளுக்கு பணம் சம்பாதிப்பது என்பது இயல்பு. அதை கொண்டு ஒரு வசதியான வாழ்க்கையை கூட வாழ்ந்து வரலாம். ஆனால் ஏதேனும் ஒரு அசம்பாவிதம் காரணமாக, அந்த குடும்பத்தில் சம்பாதிக்கும் முக்கிய நபர் இறந்துவிடும் பட்சத்தில், அந்த குடும்பம், தங்களுடைய வாழ்க்கை முறையை அப்படியே தொடர மிக முக்கியமானது ஆயுள் காப்பீடு. இந்த ஆயுள் காப்பீடு என்பது, ஒருவர் தன்னுடைய 18 வயதில் இருந்து 65 வரையில் எடுக்கலாம். இதற்கான பிரிமியம் தொகை என்பது பல்வேறு விதங்களில் செலுத்த முடியும்.. உதாரணமாக, ஒரே ஆண்டில், ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துவது, 5 ஆண்டுகள் மட்டும் செலுத்துவது, 10 ஆண்டுகள், 12 ஆண்டுகள், மற்றும் 15 ஆண்டுகள் என பல்வேறு வகைகளில் இதனை செலுத்த முடியும். ஒரே முறையில் பிரிமியம் செலுத்துவது என்பது சற்று கூடுதலாக தெரியும். மேலும், ஆயுள் காப்பீட்டு பிரிமியம் செலுத்தும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன.
- பாலிசியை பெறும் போதே, அதற்கு தேவையான அனைத்து தகவல்களையும் மிக சரியாக காப்பீடு நிறுவனத்திடம் கொடுத்துவிட வேண்டும். அதில் சில தவறுகள் நேர்ந்தால், காப்பீடு க்ளைம் நிராகரிக்கப்படும் நிலை உருவாகும்.
- காப்பீடு எடுக்கும் நபருக்கு ஏதேனும் நோய் இருந்தாலோ அல்லது அவர் புகை பிடிப்பவராக இருந்தாலோ, காப்பீட்டின் பிரிமியம் அதிகமாக இருக்கும்.
- 30 முதல் 35 வயது உடையவர்களுக்கு தொலைப்பேசி வழியாகவோ அல்லது வீடியோ கால் வழியாகவோ மருத்துவ பரிசோதனைகளை முடித்து கொள்ள முடியும். அப்போது, அந்த நபர் சரியான தகவல்களை வழங்குவது மிகவும் முக்கியம். காரணம், தவறான தகவல்கள் க்ளைம் செய்யும் போது பிரச்சனைகளை கொண்டு வரும்.
32 வயதான, பெங்களூருவை சேர்ந்த ராம், தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை பார்த்து வந்தார். அவர், தன் பெயரில், ஆயுள் காப்பீடு எடுத்து இருந்தார். அதற்கு ஆண்டு பிரிமியமாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்துள்ளார். ஒரு நாள், அலுவலகம் செல்லும் போது ஏற்பட்ட சாலை விபத்தால் ராம் உயிரிழந்தார். அதன் பின், அவரின் குடும்பம், ஆயுள் காப்பீட்டின் மூலம் க்ளைம் தொகையை பெற விண்ணப்பித்த போது, அந்த க்ளைம் நிராகரிக்கப்பட்டது. காரணம், அவர் புகை பிடிப்பவர். இந்த தகவல், அவர் காப்பீடு எடுக்கும் போது தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், காப்பீட்டு தொகையை பெற அந்த குடும்பம் எவ்வளவோ முயற்சி செய்தும், தவறான தகவல் கொடுக்கப்பட்டதால், அந்த க்ளைம் நிராகரிக்கப்பட்டது.
மற்றொரு நிகழ்வில், ஒருவர் தான் புகை பிடிப்பவன் என்று கூறி, அதற்கு தகுந்தாற் போல் பிரிமியம் செலுத்தியதால், அவர் கொரோனா காலத்தில் இறந்த போது அவர் குடும்பத்திற்கு காப்பீட்டு தொகை கிடைத்தது.
எனவே, காப்பீட்டு பாலிசி எடுக்கும் போது, சரியான தகவல்களை வழங்குவது க்ளைம் பெறும் வேண்டிய நேரம் வரும் போது ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கும்.
காப்பீடு தொடர்பான வழிகாட்டுதல் மற்றும் உதவிக்கு
எங்களை +91 9150087647 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். விவரங்களைப் பகிர கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்க: https://forms.gle/BEjApXuDfNWRrLZKA