மாநில மதிப்பு கூட்டப்பட்ட வரி – ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு
பல பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கான விலக்குகளை நீக்குவதற்கு மாநிலங்கள் முழுமையாக ஆதரவளித்துள்ளன என்று வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்தபோது கூறினார்
மேலும், பல பிராண்டுகள், வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கு தங்களின் உரிமை கோரல்களைக் கைவிட்டன. இவற்றில் பல பொருட்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட வரி விதிக்கப்பட்டது. மாநிலங்கள் இதற்கு முற்றிலும் விலக்கு நீக்கி இருந்தன என்று குறிப்பிட்டார்.
கடந்த 2-3 கூட்டங்களில் ஜிஎஸ்டி கவுன்சில் மிக முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. பெரும்பாலான பிரச்சினைகளை கவுன்சில் தீர்க்க முடிந்தது. என்று அவர் சொன்னார்.
வருமான வரி வருவாய் மிகவும் வலுவானது. கடந்த ஆண்டு 49% அதிகரிப்புக்குப் பிறகு, வளர்ச்சி 14-15% ஆக இருக்கும் என்று நான் எதிர்பார்த்தேன், ஆனால் நாங்கள் 37-38% வளர்ச்சியைக் காண்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
மத்திய கலால் வரி வசூல் கண்டிப்பாக குறையும். வருமான வரி தரப்பில், மூலதன ஆதாய வரி வசூல் அதிகமாக இருக்காது என்றார்.
தங்கத்தைப் பற்றிக் கேட்டபோது, தங்கத்தின் மீதான அதிக வரி தொடரும்.
உலகளவில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது, அதனால் இது எந்தளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியவில்லை என்றார் அவர்.