வரும் நாட்களில் செய்திகள் ஒரு பார்வை
வரவிருக்கும் நாட்களில் 5ஜி ஏலம், மாருதி சுசூகி, பஜாஜ் ஆட்டோ வருவாய் அறிக்கை, 22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், மற்றும் அதிக பணவீக்கம், இறக்குமதி அதிகரிப்பு என்று போராடி வரும் அமெரிக்காவின் ஜிடிபி தரவு வெளியிடல் என்று இருக்கும்
- 5G ஏலம்: இந்தியா தனது முதல் 5ஜி அலைக்கற்றை ஏலத்தை செவ்வாயன்று தொடங்க உள்ளது. தற்போதைய நிலவரப்படி ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவுடன், அதானி டேட்டாவும் ஏலத்தில் இருக்கின்றன. ஏலத்தின் வ்ழியாக அரசாங்கம் 13-20 பில்லியன் டாலர்களை ஈட்டக்கூடும். 5G தொழில்நுட்ப அடிப்படையிலான சேவைகளின் வெளியீடு 4G சேவைகள் மூலம் சாத்தியமானதை விட 10 மடங்கு அதிக வேகத்தை வழங்க முடியும்.
- வாகன வருவாய்: மாருதி கார்கள் மீதான அதிக தள்ளுபடிகள் மற்றும் உயர்ந்த மூலப்பொருள் செலவுகள் இயக்க விளிம்புகளை தொடர்ச்சியாக பாதிக்கலாம். தொடரும் செமிகண்டக்டர் சிப் பற்றாக்குறை வரிசை அடிப்படையில் 4% வருவாய் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதைப்போலவே அதிக மூலப்பொருள் செலவு மற்றும் செயல்பாட்டு விநியோகம் காரணமாக பஜாஜ் ஆட்டோ 1% y-o-y மற்றும் 6% வருவாய் சரிவைக் காண வாய்ப்புள்ளது. செமிகண்டக்டர் சிப் பற்றாக்குறை நிறுவனத்தின் செயல்திறனை தொடர்ந்து பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
- ஆக்சிஸ் வங்கி வருவாய்
Axis Bank, அதன் ஜூன்-காலாண்டு வருவாய் அறிக்கையை திங்களன்று வெளியிடும். ஆக்சிஸ் உள்ளிட்ட வங்கிகள் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் மற்றும் கிளை விரிவாக்கம் ஆகியவற்றில் முதலீடு செய்வதால், அதிக இயக்கச் செலவுகள் லாபத்தை பாதிக்கும் என்று கருதப் படுகிறது. - அமெரிக்க பொருளாதாரம்
ஜூன் காலாண்டிற்கான ஜிடிபி தரவு வியாழன் அன்று வரவுள்ளது. ஜூன் மாதத்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் 9.1% ஆக உயர்ந்தது, செவ்வாய்கிழமை தொடங்கும் இரண்டு நாள் கூட்டத்தில் அமெரிக்காவின் ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டியை மீண்டும் தீவிரமான வட்டி விகித உயர்வுக்கு செல்ல தூண்டும். - காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022
இங்கிலாந்தின் பர்மிங்காமில் வியாழக்கிழமை தொடங்கும் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் (CWG) மொத்தம் 72 நாடுகள் போட்டியிடத் தயாராகி வருகின்றன. இந்தியா 2018 இல் 26 தங்கங்கள் உட்பட 66 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டு வில்வித்தை மற்றும் துப்பாக்கி சுடுதல் ஆகியவை இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை பாதிக்கப்படும் என ஒரு சில இந்திய விளையாட்டு வீரர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
2022 நிகழ்வில் பெண்கள் கிரிக்கெட் போட்டி, 3×3 கூடைப்பந்து, 3×3 சக்கர நாற்காலி கூடைப்பந்து மற்றும் பாரா டேபிள் டென்னிஸ் ஆகிய நான்கு புதிய விளையாட்டுகள் அறிமுகமாகின்றன. கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நிகழ்வில் 15 விளையாட்டுகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 200க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மீது இந்தியாவின் நம்பிக்கை உள்ளது.