“வரி உயர்வு, வேலை இழக்கும் அபாயம்” – நகை உற்பத்தியாளர்கள்
கடந்த மாதம் தங்கத்திற்கான இறக்குமதி வரியை அரசாங்கம் 7.5% லிருந்து 12.5% ஆக உயர்த்திய பின்னர் மும்பை, அகமதாபாத், கோயம்புத்தூர், கொல்கத்தா மற்றும் ராஜ்கோட்டில் உள்ள தங்க நகை உற்பத்தியாளர்கள், தங்கள் ஊழியர்களின் வேலை நேரத்தை குறைத்துள்ளனர்.
இந்த நகை உற்பத்தி அலகுகளில் சுமார் 65 இலட்சம் மக்கள் பணியாற்றுகின்றனர். தற்போது அவர்களது வேலை நேரத்தை 7லிருந்து 8 மணி நேரமாகக் குறைத்துள்ளனர். முன்பு அவர்களுக்கு பணி 8 லிருந்து 10 மணிவரை பணி நேரமாக இருந்தது.
நகைகளின் தேவை 60 சதவீதத்தைவிட குறைந்துள்ளதால், நகை உற்பத்தியை குறைக்க, வேலை நேரத்தை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக கோவை நகை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறினார்.
வர்த்தகம் மேலும் சரிந்தால், வரும் வாரங்களில் வேலை இழப்புகூட ஏற்படும் என நகை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 17 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், ஜூன் மாதத்தில் 49 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.