Q1FY23 – டாடா ஸ்டீல் நிறுவன நிதி அறிக்கை
ஜூன் 30, 2022 (Q1FY23) உடன் முடிவடையும் காலாண்டிற்கான நிதி அறிக்கையை டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவிக்க உள்ளது.
திங்களன்று, முதலீட்டாளர்கள் காலாண்டு முடிவுகள் மற்றும் பங்குப் பிரிப்பு ஆகியவற்றுக்காக டாடா ஸ்டீல் பங்குகளை வாங்கும் உணர்வைக் கொண்டிருந்தனர். பங்கு பிரிப்பிற்கான பதிவு தேதியாக ஜூலை 29 ஐ நிறுவனம் நிர்ணயித்துள்ளது. நிறுவனம் 1:10 என்ற விகிதத்தில் பங்குகளை வழங்க திட்டமிட்டுள்ளது.
பிஎஸ்இ தரவுகளின்படி, ஜூன் 30, 2022 ம் தேதி, டாடா ஸ்டீல் 20,47,661 பங்குதாரர்களைக் கொண்டுள்ளது. கம்பெனி மற்றும் பொது பங்குதாரர்கள் வைத்திருக்கும் ஈக்விட்டி பங்குகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 121.18 கோடி ஈக்விட்டி பங்குகளாகும்.
இதற்கிடையில் BSE இல், டாடா ஸ்டீல் பங்குகள் ஒவ்வொன்றும் ₹24.90 உயர்ந்து ₹960.90 ஆக முடிந்தது. பங்குகள் இன்ட்ராடே அதிகபட்சம் ₹966.15க்கு அருகில் இருந்தன. இதன் சந்தை மதிப்பு சுமார் ₹1,17,342.75 கோடி.