ரூ.6 லட்சம் கோடியை எட்டிய அன்னிய நேரடி முதலீடு
இந்தியாவின் அன்னிய நேரடி முதலீடு (FDI) முன்னெப்போதும் இல்லாத வகையில் 2021-22 நிதியாண்டில் ரூ.6 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்தது.
மேலும், உற்பத்தித் துறைகளில் FDI ஈக்விட்டி வரவு, 2021 நிதியாண்டில் ரூ. 89,766 கோடியிலிருந்து 76 சதவீதம் அதிகரித்து 2022இல் ரூ.1,58,332 கோடியாக அதிகரித்துள்ளது.
அந்நிய நேரடி முதலீடு FY21 இல் 81.97 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது என்று அமைச்சகம் மே மாதம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.
அரசாங்கம் ” FDI ஈர்ப்பதற்காக தாராளமய மற்றும் வெளிப்படையான கொள்கையை” வகுத்துள்ளது, இதில் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளைத் தவிர, பெரும்பாலான துறைகள் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு திறந்திருக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.