கார்லைல் குழுமம் மற்றும் அட்வென்ட் இன்டர்நேஷனல்
கார்லைல் குழுமம் மற்றும் அட்வென்ட் இன்டர்நேஷனல் நிறுவனங்களுக்கு, தன் பங்குகள் மற்றும் வாரண்டுகளை விற்று ₹8,898 கோடி ($1.1 பில்லியன்) திரட்ட தனது இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக யெஸ் பேங்க் லிமிடெட் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
வாரண்டுகளை பங்குகளாக மாற்றிய பின் கார்லைல் மற்றும் அட்வென்ட் நிறுவனங்களுக்கு தலா 10% வரை யெஸ் பேங்க் அளிக்கும்.
வங்கி 3.69 பில்லியன் பங்குகளை ஒரு பங்கிற்கு ₹13.78 என விற்கும், மொத்தமாக ₹5,093.3 கோடி வரை PE நிறுவனங்களுக்கு விற்கும். கூடுதலாக, யெஸ் வங்கி ஒரு வாரண்டிற்கு ₹14.82 என மொத்தம் ₹3,805.16 கோடி வரை 2.56 பில்லியன் வாரண்டுகளை வெளியிடும்,
பிஎஸ்இயில் யெஸ் பேங்க் பங்குகள் வெள்ளிக்கிழமை 2.47% உயர்ந்து ₹14.94 ஆக இருந்தது.
ஒவ்வொரு வாரண்டின் விலையில் 25% ஒதுக்கப்படும் போது செலுத்தப்பட வேண்டும் என்றும், மீதமுள்ள 75% விருப்பத்தைப் பயன்படுத்தும்போது பங்குகளை வழங்குதல் மற்றும் ஒதுக்கீடு செய்யும் போது செலுத்த வேண்டும் என்றும் வங்கி கூறியது.