ஒப்பந்தத்தை மீறிய எலோன்மஸ்க்??
ட்விட்டர் நிறுவனம் , ஒப்பந்தத்தை மீறியதாக எலோன்மஸ்க் மீது, டெலாவேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், ட்விட்டரை வாங்குவதற்கு $44 பில்லியன் செலுத்துவதாக உறுதியளித்திருந்தார். ”ஸ்பேம்’‘ மற்றும் “போட்” கணக்குகள் குறித்து மஸ்க் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ட்விட்டரோ, தனது பயனர்களில் 5 சதவீதத்துக்கும் குறைவானவர்களே போட் கணக்கில் இருக்கிறார்கள் என்று பதிலளித்தது.
இந்த போலி பயனர்கள் குறித்து ட்விட்டர் நிறுவனத்திற்கும், மஸ்க்குக்கும் இடையில் வாதப் பிரதிவாதங்கள் முற்றி ட்விட்டரை வாங்கும் எண்ணத்தை கைவிட்டதாக மஸ்க் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து மஸ்க் மீது டெலாவேர் சான்செரி நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடுத்தது. அதே நீதிமன்றம் அக்டோபரில் மஸ்க்கிற்கு எதிரான ட்விட்டரின் உரிமைகோரல்களின் விரைவான விசாரணையை நடத்த உள்ளது.