பெரும் பங்குகளை விற்ற Zomato முதலீட்டாளர்
Zomato லிமிடெட்டின் பங்குகளை, Uber ஒரு பிளாக் டீல் மூலம் விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டீல் விதிமுறைகளின்படி பெயர் வெளியிடப்படாத (உபெர்) பங்குதாரர், தனது 612.2 மில்லியன் பங்குகளை ஒரு பங்கிற்கு ₹48-54 என்ற விலையில் விற்கிறார். பங்குகள் நிறுவன முதலீட்டாளர்களுக்கு விற்கப்படும்.
ஜொமாட்டோவின் முன்கூட்டிய ஐபிஓ பங்குதாரர்களுக்கான 12 மாத லாக்-இன் ஜூலை 23 அன்று முடிவடைந்த பிறகு, பிளாக் வர்த்தகம் வருகிறது.
Zomato இன் IPO ப்ராஸ்பெக்டஸ் படி, Uber க்கு பங்குகள் ₹22.47 என்ற விலையில் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் Zomato பங்குகள் அதன் IPO விலையான ஒரு பங்கிற்கு ₹76க்குக் கீழே வர்த்தகம் செய்தாலும், உபெர் தனது பங்குகளை லாபத்தில் விற்கும்,
முந்தைய மூன்று மாதங்கள் மற்றும் முந்தைய ஆண்டின் காலாண்டில் இருந்து ஜூன் காலாண்டில் ஸொமேட்டோ நிறுவனம் அதன் இழப்பை பாதியாகக் குறைத்து ₹186 கோடியாக இருந்தது.