வட்டி விகிதங்களை உயர்த்தும் இங்கிலாந்து வங்கி
1995 ஆம் ஆண்டுக்குப் பிறகு வியாழன் அன்று இங்கிலாந்து வங்கி, வட்டி விகிதங்களை அதிக அளவில் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
முதலீட்டாளர்களும், பொருளாதார வல்லுநர்களும், இங்கிலாந்து வங்கி அதன் பெஞ்ச்மார்க் விகிதத்தை அரை சதவிகிதம் அதிகரித்து 1.75% ஆக இருக்கும் என்று கணித்துள்ளனர்.
பிரித்தானியாவின் பணவீக்க விகிதம் 9.4% ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 15% ஆகலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் 65 பொருளாதார வல்லுனர்களில் 70% க்கும் அதிகமானோர் அரை புள்ளி அதிகரிப்பை எதிர்பார்க்கிறார்கள். சில ஆய்வாளர்கள் BoE எச்சரிக்கையுடன் நகர முடியும் என்று கூறுகிறார்கள்.
உலகப் பொருளாதாரத்தில் மந்தநிலையின் அறிகுறிகள் பெருகி வருகின்றன, முக்கிய பணவீக்கம் சமீபத்திய தரவுகளில் சரிந்தது, மேலும் வியாழன் அன்று வரவிருக்கும் மத்திய வங்கியின் புதிய கணிப்புகள் இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகளில் பணவீக்கம் கடுமையாக வீழ்ச்சியடைவதைக் காட்டக்கூடும்.
மே மாதத்தில் வெளியான அதன் கடைசி கணிப்புகளில்கூட, 2025 க்கு முன்னர் பிரிட்டனின் பொருளாதாரத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை என்று இங்கிலாந்து வ்ங்கி கூறியுள்ளது.