இலக்குகளை அதிகரிக்க திட்டம் – மார்க் ஸூக்கர்பெர்க்
நிறுவனத்தின் வளர்ச்சி குறைவதால் செயல்திறன் இலக்குகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி மார்க் ஸூக்கர்பெர்க் வியாழனன்று நடைபெற்ற கேள்விபதில் அமர்வில் கூறினார்,
இந்த ஆண்டுக்கான பொறியாளர்களுக்கான பணியமர்த்தல் இலக்கை 10,000 லிருந்து 6,000 அல்லது 7,000 ஆகக் குறைத்துள்ளதாகவும் ஜூக்கர்பெர்க் கூறினார்.
தொழில்நுட்ப நிறுவனங்கள் தனது பணியாளர்களைக் குறைப்பது புதிதல்ல.
அமேசான் தனது சில்லறை வணிகத்தில் பணியமர்த்தல் இலக்குகளை குறைப்பதாக மே மாதம் கூறியது.
மைக்ரோசாப்ட் பணியமர்த்தல் இலக்குகளை குறைத்து வருகிறது.
டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் ஜூன் மாதம் டெஸ்லா தனது மொத்த பணியாளர்களில் 3% அடுத்த மூன்று மாதங்களில் குறைக்கப்படும் என்று கூறினார்.