இன்று மறைந்த பிரதமர் ஸ்ரீ.ராஜிவ் காந்தியின் 78 வது பிறந்தநாள்.
இன்று மறைந்த பிரதமர் ஸ்ரீ.ராஜிவ் காந்தியின் 78 வது பிறந்தநாள்.
அவரின் ஆட்சி மற்றும் சாதனைகள், காலாகாலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும், அவர் ஒரு சிறந்த தலைவர் மற்றும் அவரின் அற்பணிப்பை எடுத்துக்கூறும் 6 விஷயங்கள்..
- இந்தியாவை மாற்றிய, தகவல் தொழில்நுட்ப துறைக்கு தேவையான அடித்தளத்தை மிக ஆழமாக வேறூன்றியவர். இந்தியாவை கணினி, தகவல் தொடர்பு என்ற காலத்திற்கு கொண்டு வந்தவர். அது மட்டும் அல்ல, தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்கள், சமூக எதிர் கொண்ட சவால்களுக்கான பதில்கள் என பலவற்றை செய்துள்ளார். உதாரணமாக, உலக அளவில் தடுப்பூசி தயாரிக்கும் மிகப்பெரிய நாடாக இந்தியாவை மாற்றி, போலியோ இல்லாத நாடாக்க உருவாக்கியவர்.
- பஞ்சாயத் மற்றும் நகர் மன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு உரிமையை கொடுக்க வேண்டும் என்ற தன்னுடைய தனிப்பட்ட முயற்சியால் செய்து காட்டியவர். இன்று 14 லட்சம் பெண்கள், பதவிகளில் இருப்பது இவரின் உறுதிதன்னைக்கான சான்று.
3.அசாம், பஞ்சாப், மிசோராம் மற்றும் டார்ஜிலிங் ஆகிய பிரச்சனை மிகுந்த பகுதிகளில் அமைதியை, வளர்ச்சியை கொண்டு வந்தவர்.
- 18 வயது உடையவர் வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்தார். மேலும் அனைத்து மாநிலங்களும் நவோதையா வித்யாலயா பள்ளிகளை நிறுவி இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதி செய்தார். மேலும் சுவாமி விவேகானந்தாவின் பிறந்தநாளை தேசிய இளைஞர்கள் தினமாக அறிவித்தவர்.
5.சுற்றுசூழலை பாதுகாக்க, தூய்மை கங்கை மற்றும் தரிசு நில வளர்ச்சி திட்டத்தை கொண்டு வந்தவர். அதேபோல், தாராளமையாக்கல் கொள்கை உருவாக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, காங்கிரஸின் வாக்குறுதிகளில் இடம் பெற்ற 1991 பொருளாதார சீர்திருத்தங்களில் இவரின் பெரும் சுவடுகள் இருந்தன.
6.சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே இந்தியாவிற்கு இருந்த நீண்ட கால பிரச்சனைகளை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தார். மேலும், அணுஆயுத பயன்பாட்டை தடுக்க ஒரு செயல்திட்டத்தை ஐக்கிய நாடுகளிடம் வழங்கினார்.
இந்த தருணத்தில், தன்னுடைய கொள்கைகளுக்காக உறுதியாக நின்ற, பெருமை மிக்க இந்தியாவின் வீர மகனை இந்திய தேசிய காங்கரஸ் வணங்குகிறது.
திரு. ஜெய்ராம் ரமேஷ், நாடாளுமன்ற உறுப்பினர், தொடர்புத்துறை பொதுச்செயலாளர், இந்திய தேசிய காங்கரஸ்