2029 ல் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாகும்
பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆய்வுப்பிரிவு அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது அதன்படி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பிரிட்டனை விட அதிகம் உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
தற்போதைய வேகத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்தால், இந்தியா 2027 ம் ஆண்டில் ஜெர்மனியை யும், 2029ல் ஜப்பானையும் மிஞ்சும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
2014 ம் ஆண்டு இந்தியா பொருளாதாரத்தில் 10வது இடத்தில் இருந்த நிலையில் 8ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் இந்தியா முன்னேறியுள்ளது என்று sbi யின் மூத்த பொருளாதார ஆலோசகர் சவுமியா காந்தி கோஷ் தெரிவித்தார்.
2022-23நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 13.5%ஆக உள்ளது.
உலகளவில் நிலையற்ற சூழல் உள்ள போதும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6முதல் 6.5%ஆக வரும் நிதியாண்டில் இருக்கும் என்று sbi ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மற்றொரு நிறுவனமான iip கூறும் தரவுகளின் படி சீனா மெல்ல மெல்லத் தங்கள் நாட்டில் உற்பத்திகளை குறைத்து வருவதாக கூறுகிறது.
இந்த சூழலில் சீனாவில் இருந்து சில நிறுவனங்கள் இந்தியாவுக்கு வந்திருப்பதாகவும். குறிப்பாக ஐ போன்கள் இந்தியாவில் தயாராவது குறித்து அந்நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.