“இந்தியாவின் மொத்த வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை கையிருப்பு இந்தாண்டில் குறையும்”…
இந்தியாவில் நடப்பு கணக்கு பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக அந்நிய நாட்டு கரன்சிகள் கையிருப்பு சரிந்து வருகிறது என டாயிட்ச் வங்கி அறிக்கை தெரிவிக்கிறது., நடப்பு நிதியாண்டில் வணிக பற்றாக்குறை 300பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.இதன் காரணமாக நடப்பு கணக்கு பற்றாக்குறை 140 பில்லியன் டாலராக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9 விழுக்காடாகும்.
நடப்புக்கணக்கு பற்றாக்குறை 140 பில்லியன் டாலராக குறையும்பட்சத்தில் திருப்பி செலுத்த வேண்டிய பணத்தின் அளவு 80 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்று டாயிட்ச் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடப்பு ஸ்பாட் பாரக்ஸ் எனப்படும் வெளிநாட்டு கரன்சி கையிருப்பு 607 பில்லியனில் இருந்து 561 பில்லியனாக குறைந்துள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் நிலையற்ற தன்மை குறைந்து ரூபாயின் மதிப்பு சரிவது குறையும் என்றும் டாயிட்ச் வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது