அமெரிக்க பங்குச்சந்தையிலும் இந்திய சிஇஓ-களின் ஆதிக்கம்…
அமெரிக்காவின் முன்னணி பங்குச்சந்தைகளில் ஒன்றாக திகழ்வது s&p500 அமைப்பு.. அமெரிக்காவின் முன்னணியில் உள்ள 500 நிறுவனங்கள் தங்கள் பங்கு நிலவரங்களை இந்த சந்தையில் பட்டியலிடுவது வழக்கம். இந்த சந்தையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் மெல்ல உயர்ந்து வருகிறது. இது தொடர்பான அறிக்கை அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.ஸ்டார் பக்ஸ் நிறுவனம் அண்மையில் அதன் புதிய தலைமை செயல் அதிகாரியாக லக்ஷ்மன் நரசிம்மனை நியமித்துள்ளது. லக்ஷ்மன் மற்றும் 25 இந்திய வம்சாவளியினர் குறித்து புளூம்பர்க் நிறுவனம் ஒரு ஆய்வை நடத்தியது. அந்த பட்டியலில் s&p500 நிறுவன பங்குகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் 5 விழக்காடு பேர் என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவங்களில் தலைமை பதவிகளில் உள்ளவர்களாவர்.
26 இந்தியர்களில் பெரும்பாலானோர் தங்கள் பள்ளி, கல்லூரி,பட்டப்படிப்பை இந்தியாவில் முடித்துவிட்டு, மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதில் இருவர் பெண்கள் என்பது கூடுதல் சிறபம்சமாகும். கூகுள் நிறுவன சிஇஓ, சுந்தர் பிச்சை,மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்ய நாதெள்ளா,அடோப் நிறுவனத்தின் சாந்தனு நாராயண், ஐபிஎம் நிறுவனத்தின் அர்விந்த் கிருஷ்ணா உள்ளிட்டவர்கள் மிக முக்கிய நிறுவனங்களில் கவனம் ஈர்த்துள்ளவர்களாவர். இந்த 26 இந்திய பூர்விகம் கொண்ட சிஇஓ-கள், அமெரிக்க பங்குச்சந்தையான S&P 500-ல் மொத்த சந்தை மதிப்பில் 13 விழுக்காட்டுக்கு பொறுப்பாளர்களாக உள்ளனர்.