எச்டிஎப்சி வங்கிக்கணக்குளை மூடச் சொல்லிய அரசு:
பஞ்சாப் மாநில நீர்வளத்துறை அதன் முதன்மை பொறியாளர்கள்,செயற் பொறியாளர் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் எச்டிஎப்சி வங்கிக் கணக்குகளை மூடும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
போதிய ஒத்துழைப்பை வங்கி தரப்பில் வழங்கவில்லை என்றும் அந்த துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த 22ம் தேதியிட்ட சுற்றறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு பணம் அளிப்பதாக வங்கி வாக்குறுதி அளித்த நிலையில், அந்த வாக்குறுதிகளை வங்கி நிறைவேற்றவில்லை என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் புகார்களை அடுத்து எச்டிஎப்சி வங்கியில் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சுற்றறிக்கை கூறியுள்ளது.மேலும் எச்டிஎப்சி வங்கியில் உள்ள சம்பளக் கணக்குகளுக்கு பதிலாக பிடித்தமான வேறு வங்கிகளுக்கு மாற்றி வைக்க வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வங்கித் தரப்பில் எந்த விதிமீறலும் செய்யவில்லை என்று, எச்டிஎப்சி வங்கி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.