உலகின் 2-வது பணக்காரர் ஆனார் கவுதம் அதானி…
ஃபோர்ப்ஸ் அமைப்பு ரியல் டைம் பில்லியனர் என்ற பட்டியலை தயாரித்துள்ளது. இதில் இந்தியாவின் பெரும்பணக்காரர் கவுதம் அதானி உலகளவில் இரண்டாவது இடம்பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் 273.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் முதலிடத்திலும், 155.7 பில்லியன் சொத்து மதிப்புடன் கவுதம் அதானி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
அமெரிக்காவின் பெருநிறுவமனை ஜெப் பெசூஸாசின் அமேசான் நிறுவனத்தை விட அதிகம் வருவாயை கொண்டுள்ளார் கவுதம் அதானி. இந்தாண்டில் மட்டும் 70 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை அதானி ஈட்டியுள்ளார்.
60 வயதாகும் கவுதம் அதானி , நிலக்கரி, ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளார். பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் கவுதம் அதானி அடுத்தாக பசுமை ஆற்றல் துறையில் போட்டி போட உள்ளார். நிறையை பணம் ஈட்டியுள்ள கவுதம் அதானி, நல்ல காரியங்களுக்கும் நன்கொடை அளித்து வருகிறார். அண்மையில் அவர் தனது பெயரில் உள்ள அறக்க்கட்டளைக்கு 7 புள்ளி 7 பில்லியன் டாலரை தானமாக வழங்குவதாக அறிவித்தார். துறைமுகங்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்தி ஆகிய துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் அதானி உலகப்பணக்கார பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. பலரும் அதானிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.