ஜூம் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!!!
கொரோனா காலகட்டத்தில் பல தரப்பினரும் தங்கள் அலுவலக மீட்டிங்களை ஜூம் செயலி மூலமே செய்து வந்தனர். இந்த நிலையில் அதில் உள்ள குறைபாடு குறித்து மத்தியஅரசு புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
இந்திய கணினி அவசரகால செயல்பாட்டு குழு என்ற அமைப்பு (CERT-IN) என்ற அமைப்புதான், இந்தியாவின் சைபர் பாதுகாப்பு மற்றும் அறிவுறுத்தல்களில் மிகமுக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த அமைப்பு அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஜூம் செயலியில் பாதுகாப்பு குறைபாடு மிதமான வகையில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது ஜூம் செயலி பயன்படுத்தும் நபர்களின் ஆடியோ மற்றும் வீடியோவை தொடர்பே இல்லாத மூன்றாம் நபர் கூட சேமிக்கும் வசதி உள்ளதாக செர்ட் அமைப்பு கூறியுள்ளது. எனவே இதில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன், லேப்டாப்களில் உள்ள ஜூம் செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த வகை புதிய அப்டேட்கள் மூலம் மேல் சொன்ன தாக்குதல்கள் தடுக்க முடியும் என்றும், ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க ஏதுவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் இந்த அமைப்பு,மைக்ரோசாஃப்ட் நிறுவன பொருட்களில் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்டி இருந்தது. இந்த சூழலில் ஜூம் செயலியின் பாதுகாப்பு அம்சங்கள் பிளே ஸ்டேரில் வெளியாகியுள்ளது.