சரிவு… சரிவு… சரிவு…
இந்தியாவில் பிற நாட்டு கரன்சிகள் அதிகம் வைத்திருக்கப்பட்டது. அதிகரித்து வரும் அமெரிக்க டாலரின் மதிப்பு காரணமாக
மத்திய ரிசர்வ் வங்கி வெளிநாட்டு பணங்களை அதிகளவு கையில் இருந்து விற்றுள்ளது
இதன் ஒரு பகுதியாக கடந்த 14ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பல ஆண்டுகளாக இல்லாத அளவில் இந்தியாவின்
மொத்த வெளிநாட்டு பண கையிருப்பு அளவு 528.37 பில்லியன் டாலர்களாக உள்ளது
கடந்தாண்டு செப்டம்பர் 3ம் தேதி இந்தியாவின் வெளிநாட்டு பண கையிருப்பு 642.453 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது அக்டோபர் 7ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 10 வாரங்களில் இல்லாத அளவாக வெளிநாட்டு பண கையிருப்பு அதிகரித்த நிலையில் ஆனால் அடுத்தடுத்த நாட்களில் கையிருப்பு கரையத் தொடங்கி, 532 டாலர்களாக இருந்தது.
வெளிநாட்டு பண கையிருப்பைப் போலவே தங்கத்தின் கையிருப்பு அளவும் 37 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சரிந்துள்ளது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் சரிந்துள்ள நிலையில், அதனை ஈடுகட்டும் முயற்சியில் மத்திய ரிசர்வ் வங்கி இறங்கியுள்ளது தொடர்ந்து வெளிநாட்டு பண கையிருப்பு குறைந்து வரும் நிலையில் கையிருப்பு வலுபெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 4%ஆக அதிகரிக்கும் பட்சத்தில் இந்தியாவின் மொத்த கையிருப்பு 510 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சரியும் சூழலும் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 2013-ல் வெளிநாட்டு பண கையிருப்பு 300பில்லியன் டாலருக்கும் கீழ் சென்ற நிலையில் மீண்டும் அதுபோன்ற ஒரு சூழல் உருவாகுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.