வாங்க!! வாங்க!!! உங்களுக்கு இல்லாததா!!!!
பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இம்ரான் கான் இருந்தபோது, சவுதி
அரேபியாவில் இருந்து எண்ணெய் கிடங்கு, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க முயற்சிகளை மேற்கொண்டார்
ஆனால் அதற்குள் பாகிஸ்தானில் செபாஷெரீப் தலைமையிலான ஆட்சி அமைந்துவிட்டது.
கிடப்பில் போடப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை மீண்டும் கையில் எடுத்துள்ள பாகிஸ்தான் அரசு
சவுதி அரேபியாவிடம் பேசி சுமூக முடிவை எட்டியுள்ளது. இதன் விளைவாக பாகிஸ்தானில் 12 பில்லியன் அமெரிக்க டாலர்
மதிப்புள்ள சுத்திகரிப்பு ஆலை அமைய இருக்கிறது
சவுதி மன்னர் முகமது பின் சல்மான் பாகிஸ்தானுக்கு அடுத்த மாதம் வருகிறார்.சவுதி மன்னர் பாகிஸ்தானுக்கு வரும்போது
கிடப்பில் போடப்பட்டு கிடந்த 3 ஆண்டுக்கு முந்தயை ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது கடந்த 2019ம் ஆண்டு இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது சவுதி மன்னர் வருகை தந்தார். அந்த நேரத்தில் 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருந்தன. பாகிஸ்தானில் ஏற்பட்ட அரசியல் மாற்றம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக
சவுதிக்கும் பாகிஸ்தானுக்கும் இருந்த உறவில் விரிசல் காணப்பட்டது. இந்த சூழலில் உடைந்த உறவு மீண்டும் ஒட்டிக்கொள்ள ஆளுங்கட்சி தற்போது காய் நகர்த்தி வருகிறது.