இருப்பதை விட்டு, பறப்பதை பிடித்தால் இப்படி தான்!!!!
டிவிட்டர் நிறுவனத்தை பெரிய தொகை கொடுத்து எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இந்த நிலையில் தனது பிரதான நிறுவனமான டெல்ஸாவின் பங்குகளின் ஒரு பகுதியை விற்றுள்ளார்.. இதனால் டெஸ்லாவின் பங்குகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கியுள்ளனர். 200 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் வலம் வந்த எலான் மஸ்க் தற்போது 194 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துமதிப்புடன் உள்ளார். டெஸ்லா நிறுவன பங்குகள் கிட்டத்தட்ட பாதி அளவு குறைந்துள்ளன. டிவிட்டரை மஸ்க் வாங்கப்போகிறார் என்ற தகவல் வெளியானதில் இருந்து டெஸ்லாவின் பங்குகளின் விலை கிட்டத்தட்ட 70 பில்லியன் டாலர் வரை சரிந்துள்ளது. உலகளவில் டெஸ்லா நிறுவன கார்களுக்கு அமோக வரவேற்பு உள்ள நிலையில் எலான் மஸ்க் தனது நிறுவன பங்குகளை விற்று டிவிட்டரை வாங்குவதை பலரும் கேலி செய்து வருகின்றனர். டெஸ்லாவை கவனிக்காமல் முழுநேரமும் டிவிட்டரை வளர்ப்பதிலேயே மஸ்க் அதிக நேரம் செலுத்துவதாகவும் இதனால் டெஸ்லா நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் கலக்கத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்லாவை வளர்ப்பதில் மஸ்க்கின் டிவீட்கள் மிக முக்கியமானதாக இருந்த நிலையில் தற்போது அனைத்து டிவீட்களும் டிவிட்டரை பற்றி மட்டுமே உள்ளதாகவும் முதலீட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.