புதிய கட்டுப்பாடுகள் விதிக்கும் செபி!!!
இந்தியாவில் நிதி ஆலோசனைகளை வழங்கி வரும் நபர்கள் நிதி இன்புளூயன்சர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். நித சார்ந்த ஆலோசனைகள் வழங்க இவர்களுக்கு என பிரத்யேக எந்த அங்கீகாரமும் இல்லை, ஆனால் அவர்கள் எதில் முதலீடு செய்யலாம், எப்படி செலவு செய்யலாம் என்று மேதாவிகள் போல ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் செபி அமைப்பின் நிரந்தர உறுப்பினர் மொஹாந்தி பேசியுள்ளார். சமூக வலைதளங்களில் பிரபலமாக பேசும் நபர்களை முறைப்படுத்த, செபி புதிய கட்டுப்பாடுகளை வகுத்து வருவதாக கூறியுள்ளது. தனியார் நிறுவனங்கள் பணம் கொடுத்து தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யும்படி பேச வைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. நிதி ஆலோசனை தொடர்பாக பேசுவோர் செபியில் பதிவு செய்வது அவசியமாகிறது. இந்தியா முழுவதும் ஆயிரத்து 300 பேர் மட்டுமே
செபியில் பதிவு செய்த நிதி ஆலோசகர்களாக உள்ளனர். நிதி மற்றும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய ஆலோசனை வழங்குவதாக கூறி 415 சம்பவங்கள் நடப்பு நிதியாண்டில் பதிவாகி இருப்பதாக செபி தெரிவித்துள்ளது. நிதி ஆலோசகர் யார் என்பதை வரையறுப்பதில் மிகப்பெரிய சிக்கல் நிலவுவதாக செபியின் தலைவரான மதாபி புரிபுச் தெரிவித்துள்ளார்.
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வது தொடர்பாக பிரபலங்கள் நடிக்க கட்டுப்பாடுகளை செபி ஏற்கனவே வகுத்துள்ள நிலையில், இன்புளுயன்சர்கள் தொல்லை செபிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.