டீசல் இஞ்சினை கைவிடாத முடியாது மக்களே!!!
கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை அரசு செய்து வரும் நிலையில், புகையில்லாமல் பயணிக்கும் வாகனங்களுக்கு மக்கள் மாறி வருகின்றனர். இந்த சூழலில் இன்னமும் டீசலில் இயங்கும் கார்களை டாடா மற்றும் மகேந்திரா நிறுவனங்கள் உற்பத்தி செய்து வருகின்றன. குறிப்பிட்ட இந்த இரு நிறுவனங்களின் டீசல் கார்கள் விலை கணிசமாக உயர்ந்து வந்தாலும்,டீசல் இன்ஜின் வகை கார்களை தயாரிப்பதில் இந்த நிறுவனங்கள் அலாதி தீவிரம் காட்டி வருகின்றனர். SUV ரக கார்களின் விற்பனை அதிகளவில் உள்ளதால் இந்த துறை வாகனங்களை விற்பதில் டாடாவும் மகேந்திரா நிறுவனங்களும் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த நிதியாண்டில் மட்டும் இந்த வகை கார்களின் விற்பனை கிட்டத்தட்ட 40% உயர்ந்துள்ளது. பிஎஸ் 6 ரக கார்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட, இந்த இருநிறுவனங்களும் டீசலில் இயங்கும் கார்களை உற்பத்தி செய்கின்றன. கொரோனாவுக்கு முன்பு டீசல் வாகனங்களை வாங்கத் தயங்கிய வாடிக்கையாளர்கள் தற்போது அது தரும் மைலேஜ் மற்றும் பிற காரணிகளை கருத்தில் கொண்டு
அதிகம் டீசல் வாகனங்களை வாங்கி வருகின்றனர். மகேந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள தார் ரக வாகனங்களில் 3-ல் 2 பங்கு டீசல் வகை வாகனங்களாகத் தான் உள்ளன. அதேபோல் ஸ்கார்பியோ ரக கார்களில் 75% டீசல் வகை கார்களாகவே உள்ளன.
சந்தையில் டீசல் வகை வாகனங்களுக்கு என தனியாக ரசிகர்கள் உள்ளதால், சந்தையில் இதற்கென தனி இடம் உண்டு என டாடா நிறுவனம் தெரிவிக்கிறது