உச்சம்!!! உச்சம்!!! உச்சம்!!!
இந்திய பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை நவம்பர் 30ம் தேதி தொட்டுள்ளன, சர்வதேச சந்தையில்
கச்சா எண்ணெய் விலை கணிசமாக சரிந்து வருவதாலும், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதாலும் இந்திய பங்குச்சந்தைகள் உச்சம் பெற்றுள்ளன. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 417 புள்ளிகள் உயர்ந்து 63 ஆயிரத்து 99 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 140 புள்ளிகள் உயர்ந்து 18 ஆயிரத்து 750புள்ளிகளாக இருந்தது மின்சாரம்,உலோகம் மற்றும் ஆட்டோமொபைல் துறை பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. வங்கிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகளும் ஏற்றம் கண்டுள்ளன இதே வேகத்தில் பயணித்தால் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 19 ஆயிரம் புள்ளிகளை விரைவில் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு வார காலமாகவே பங்குச்சந்தையில் கணிசமாக ஏற்றம் கிடைத்து வருவதால் முதலீட்டாளர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். எனினும் வார இறுதியில் பங்குகளை விற்க அதிக வாய்ப்புள்ளதால் போட்ட பணத்தை திரும்ப எடுப்பதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.