தொடர்ந்து உச்சத்தில் சந்தை!!! என்ன காரணம் ?
சர்வதேச அளவில் மாறி வரும் பொருளாதார மாற்றங்கள் சாதகமாக உள்ளதாலும், இந்திய சந்தைகள் வலுவாக
உள்ளதாலும் தொடர்ந்து 8வது நாளாக இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது.
வியாழக்கிழமை வர்த்தகம் முடியும்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 63 ஆயிரத்து 284 புள்ளிகளாக இருந்தது 184புள்ளிகள் உயர்ந்துள்ள சென்செக்ஸில் தகவல் தொழில்நுட்பம், உலோகம் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பால் உயர்வுடன் முடிந்தன. மும்பை பங்குச்சந்தையைப் போலவே தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் ஏற்றம் கண்டது. இதுவரை இல்லாத உச்சமாக 18ஆயிரத்து 182 புள்ளிகளை அந்த குறியீடு எட்டியது மும்பை பங்குச்சந்தையை பொருத்தவரையில் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகளில் அசாத்திய வளர்ச்சி காணப்பட்டது.
ஆனால் தனியார்துறை வங்கிகள் , இந்துஸ்தான் யுனிலிவர் மற்றும் மாருதி சுசுக்கி ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன. சீன அரசு தனது கொரோனா கட்டுப்பாட்டு கொள்கையில் மாற்றம் கொண்டு வந்துள்ளதும் உலகளாவிய சந்தையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பா, ஜெர்மனி, பாரிஸ் பங்குச்சந்தைகளும் நல்ல ஏற்றம் கண்டு வருகின்றன. டோக்யோ,தென்கொரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் பங்குச்சந்தைகளும் நல்ல ஏற்றம் கண்டு வருகின்றன.