இது தான் இந்தியாவின் மதிப்பு மிக்க நிறுவனம் !!!!
புர்கண்டி பிரைவேட் ஹூரூன் இந்தியா நிறுவனம் இந்தியாவின் மதிப்பு மிக்க நிறுவனங்கள் எவை என்று ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்தியாவில் உள்ள 500 நிறுவனங்களை பட்டியலிட்டுள்ள அந்த அமைப்பு, முதலிடத்தில் ரிலையன்ஸ் குழுமத்தை வைத்துள்ளது. இந்தியாவில் உள்ள பிற நிறுவனங்களை ஒப்பிடுகையில் வருவாய் மற்றும் லாபத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கே முதலிடம் கிடைத்துள்ளது. கடந்தாண்டை ஒப்பிடுகையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3.6% உயர்ந்து 17லட்சத்து 20ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இந்த பட்டியலில் டிசிஎஸ் நிறுவனம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 10.8%குறைந்து 11லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
இந்க பட்டியலில் எச்டிஎப்சி வங்கிக்கு 3-ம் இடம் கிடைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 8 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது இந்த பட்டியலில் 4-ம் இடத்தில் இன்போசிஸ் நிறுவனம் உள்ளதுசந்தை மதிப்பு (6 லட்சத்து 40ஆயிரம் கோடி ரூபாய்) 5-ம் இடத்தில் ஐசிஐசிஐ வங்கி உள்ளது இதன் சந்தை மதிப்பு 6 லட்சத்து 30ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.