வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது!!!!
இந்திய ரயில்வே என்பது ஏழை எளிய மக்கள் முதல் பெரிய செல்வந்தர்கள் வரை பயன்படுத்தும் முக்கியமான துறையாக உள்ளது. இந்த துறையில் கடந்தாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தைவிட இந்தாண்டு 76% வருவாய் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதாவது நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அண்மையில் முடிந்த நவம்பர் மாதம் வரை 43 ஆயிரத்து324 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. கடந்தாண்டு அதே காலகட்டத்தில் மத்திய ரயில்வேவுக்கு கிடைத்த வருவாய் வெறும் 24 ஆயிரத்து 631 கோடி ரூபாய் மட்டுமே முன்பதிவு செய்துவிட்டு பயணிப்போரின் எண்ணிக்கை மட்டும் 48கோடியே 60 லட்சத்தில் இருந்து 53 கோடியே 65 லட்சம் பேராக உயர்ந்திருக்கிறது. முன்பதிவு செய்துவிட்டு பயணிப்போரின் மூலம் இந்திய ரயில்வேவின் வருவாய் 50% உயர்ந்திருக்கிறது. முன்பதிவு செய்து பயணிப்பதன் மூலம் மட்டும் அரசுக்கு வருவாயாக 34 ஆயிரத்து 303 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதுவே கடந்தாண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 22ஆயிரத்து 904 கோடி ரூபாயாக இருந்தது முன்பதிவில்லாமல் பயணிப்போரின் மூலம் வருவாய் 155%உயர்ந்துள்ளதுகடந்தாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையில் 138 கோடியே 13 லட்சம் பயணிகள் மட்டுமே பயணித்தனர். இந்த சூழலில் நடப்பாண்டில் இது மேலும் உயர்ந்து 352 கோடி பேர் முன்பதிவில்லாமல் பயணித்து உள்ளனர். இதனால் அரசுக்கு 9 ஆயிரத்து 21 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்தாண்டில் இந்த பிரிவில் வருவாய் ஆயிரத்து 728 கோடி ரூபாயாக மட்டுமே இருந்ததாக ரயில்வே வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரியவந்திருக்கிறது.