19,000 கார்களை திரும்பப்பெறும் மகேந்திரா நிறுவனம்!!!!
இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது மகேந்திரா கார் நிறுவனம், இந்த நிறுவனம் அண்மையில் XUV மற்றும் scorpio-N வகை சொகுசு கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த கார்களில் ஜூலை 1ம் தேதி முதல் நவம்பர் 11ம் தேதி வரை உற்பத்தி செய்த கார்களில் clutch bell housing பாகத்தில் ரப்பரில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் உற்பத்தி செய்திருந்த கார்களை வாங்கியிருந்தால் அந்த கார்களை பழுதுநீக்க மகேந்திரா நிறுவனம் முடிவெடுத்துள்ளது. மொத்தம் 19ஆயிரம் கார்களில் இந்த பழுது கண்டறியப்பட்டுள்ளது. இதில் scoripio-N ரகத்தில் 6ஆயிரத்து618 கார்களும்,xuv700 ரகத்தில் 12,566கார்களிலும் இந்த பிழை இருப்பது தெரியவந்துள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் இலவசமாகவே மாற்றிக்கொள்ளும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலகட்டத்தில் வாங்கப்பட்ட கார்களில் உள்ள பழுது தொடர்பாக சம்பந்தப்பட்ட டீலர்களே உரிமையாளர்களுக்கு தொடர்பு கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் அந்த நிறுவனத்தின் கார்கள் விற்பனை உள்ளூரில் 56% உயர்ந்துள்ளது