இதை சார்ந்தே உலக பொருளாதாரம் இருக்க வேண்டும்!!!!! – ரகுராம் ராஜன்
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராக ரகுராம் ராஜன் இருந்து வந்தார். இவர் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது,உலக பொருளாதாரமே குறைவான பணவீக்கத்தை சார்ந்தே இருக்க வேண்டும் என்றும், இதற்கு அந்தந்த நாடுகளின் மத்திய ரிசர்வ் வங்கிகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தெரிவித்தார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வரும் அவர், உலகளாவிய பொருளாதார சூழல்,உலகமயமாக்கலை தடுக்கும் காரணிகள், சீனாவின் வளர்ச்சி பாதிப்பு மற்றும் கே வடிவ பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் சர்வதேச பொருளாதார வளர்ச்சியை பாதிப்பதாக தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சி மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கடன்களின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதை பாராட்டியுள்ள ரகுராம் ராஜன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் எடுத்த நடவடிக்கைகள் உண்மையில் நல்ல பலன்தந்ததாகவும், கடினமான தருணங்களில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகளையும் ரகுராம் ராஜன் பாராட்டியுள்ளார்.