தானியங்கி கார்கள் எத்தன வருசமா செய்வீங்க???? கடுப்பான முதலீட்டாளர்கள்!!!!!
ஓட்டுநர்கள் இல்லாத கார்களை உற்பத்தி செய்ய பல முன்னணி நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் அதற்கான தொழிற்நுட்பத்தை வடிவமைக்க பல ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன. உலகின் முன்னணி கார் நிறுவனங்களே இந்த துறையில் சாதிக்க கடும் சிரமஙக்ளை சந்தித்து வரும் நிலையில் பல நிறுவனஙக்ளுக்கு இந்த நுட்பம் சாத்தியமற்றதாக மாறத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த நுட்பம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கையில் பணம் போட்டவர்கள் கேள்விக்கனைகளை தொடுக்கத் தொடங்கிவிட்டனர். கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபெட் நிறுவனம் பல ஆண்டுகளாக இந்த துறையில் சோதனைகளை செய்து வருகின்றது. இதற்கு TCI என்ற நிறுவனம் நிதி ஒதுக்கி வருகிறது. இந்த நிலையில் இன்னும் எத்தனை ஆண்டுகளில் இந்த நுட்பம் பயன்பாட்டுக்கு வரும் என்று கேள்வி எழுப்பியுள்ள முதலீட்டு நிறுவனம், உலகளவில் பொருளாதார மந்த நிலை உள்ளதையும் சுட்டிக்காட்டி, பணிகளை துரிதப்படுத்த அழுத்தம் தந்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் இண்டெல்,வெய்மோ உள்ளிட்ட நிறுவனங்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. எந்த வித பெரிய முன்னேற்றமும் இல்லாத சூழலில் பல முன்னணி நிறுவனங்களும் இதனை கைவிட்டுவிட்டு,ஓட்டுநருக்கு உதவும் நுட்பங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஜெனரல் மோட்டார்ஸ், டெஸ்லா,மோர்கன் உள்ளிட்ட நிறுவனங்களும் இதில் எந்த முன்னேற்றமும் கிடைக்காததால் தலையை பிய்த்துக்கொண்டு அமர்ந்துள்ளனர். ஆனால் போட்ட முதலீடுகள் மட்டும் கரைந்தபடியே இருக்கின்றன.