10 இல்லையாம் 20,000 பேரை நீக்க திட்டமாம்!!!!
உலக பொருளாதார மந்தநிலை, பலரையும் ஆட்டிப்படைக்கும் நிலையில் பெரிய நிறுவனங்களையும் விட்டுவைக்கவில்லை, பெரிய தொழில் நிறுவனமான அமேசானுக்கு உலகின் பல்வேறு நாடுகளிலும் கிளைகள் உள்ளன. அமேசான் நிறுவனத்தில் அண்மையில் 10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த சூழலில் போதிய வருவாய் இல்லாத மேலும் சில துறைகளை அமேசான் நீக்கி வருகிறது. இதனால் அமேசான் நிறுவனத்தில் வரும் மாதங்களில் மொத்தம் 20ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய அந்நிறுவன அதிகாரிகள் முடிவெடுத்து உள்ளனர். அமேசான் நிறுவனத்தின் அனைத்து நிலைகளிலும் அதாவது நிலை 1 முதல் 7ம் நிலை வரையில் அனைத்து தரப்பிலும் சரியாக பணியாற்றாதவர்களை அடையாளம் கண்டு நீக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
உலகம் முழுக்கவும் அமேசான் நிறுவனத்தில் மட்டும் 15 லட்சம் பேர் பணியாற்றி வரும் சூழலில் தற்போது குறைய உள்ள எண்ணிக்கையை கருத்தில் கொண்டால் அந்த நிறுவனத்தின் கார்பரேட் ஊழியர்களில் 6% பணியாளர்கள் பணியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரே ஒருநாள் மட்டுமே அவகாசம் தந்துவிட்டு பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பவும் அமேசான் திட்டமிட்டுள்ளதால் அமேசானில் பணியாற்றுவோர் பணிபாதுக்கு இல்லாமல் அச்சத்தில் உள்ளனர். பழைய ஆட்களை நீக்கிவிட்டு புதிய பணியாளர்களை சேர்ப்பதால் ஏற்படும் இழப்பின் காரணமாகவும், தொழில் நஷ்டத்தில் இயங்குவதாலும்,இந்த கடினமான முடிவை எடுப்பதாக அமேசான் நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி வெளியேற்றவில்லை என்றும், பணியாளர்கள் தங்கள் விருப்பப்படியே வெளியேறியதாகவும் அமேசான் அண்மையில் தெரிவித்திருந்தது. இதே பாணியில்தான் வரும் நாட்களிலும் பணிநீக்கம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.