ராக்கெட் வேகத்தில் செல்லும் தங்கத்தின் விலை!!!!
அமெரிக்க டாலரின் மதிப்பு படிப்படியாக சரிந்து வரும் சூழலில், அதனை எளிதான முதலீடாக மாற்ற பலரும் தங்கத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். இதன் காரணமாக சர்வதேச அளவில் தங்கத்தின் விலை ஆயிரத்து 800 டாலர்களாக உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதிக்கு பிறகு இப்போதுதான் மீண்டும் தங்கத்தின்விலை அதிகரித்து உள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வரும் நாட்களில் கடன்களுக்கான வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தக்கூடும் என்ற அச்சமும், வேலைவாய்ப்பு அளவு குறைந்து வருவதாலும் பங்குச்சந்தையில் இருந்து அதிக முதலீட்டாளர்கள் வெளியேறும் போக்கு உள்ளது. இதன் விளைவாக தங்கத்தை வாங்குவோரின் அளவும் கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒரு அவுன்ஸ் தங்கம் தற்போது உள்ளதை விட , இந்தவாரம் முழுக்க ஏறுமுகமாகவே இருக்கும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர் தங்கத்துக்கு நிகராக வெள்ளியின் விலையும் தொடர்ந்து உயரும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது.அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளில் இத்தகைய தங்க முதலீடுகள் என்றால் இந்தியா போன்ற தங்கம் அதிகம் பயன்படுத்தும் நாடுகளிலும் இதே நிலைதான் தொடர்கிறது. இந்தியாவில் தங்கத்தின் ஆதார விலை 53 ஆயிரத்து 580 ஆகவும்,ரெஸிஸ்டன்ஸ் மதிப்பு 53 ஆயிரத்து970 ஆகவும்,வரும் நாட்களில் இந்த தொகை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.