டிஜிட்டல் கரன்சியை மட்டும் உருவாக்கினால் போதாது!!!!!
பணத்தை டிஜிட்டலாக மாற்றும் பரிட்சார்த்த முயற்சியை உலகிலேயே வேறு எந்த நாடும் செய்வதற்கு முன்பு இந்தியா சோதனை செய்துள்ளது. நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு இடையே அறிமுகமான டிஜிட்டல் பணப்பரிமாற்றம், கடந்த 1ம் தேதி முதல் சாதாரண பொதுமக்களும் பயன்படுத்தும்வகையில் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் டிஜிட்டல் பணம் குறித்து ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் டிஜிட்டல் பணம் என்பதை உருவாக்கினால் மட்டும் போதாது,மாறாக தனியார் கிரிப்டோ கரன்சிகளுடன் போட்டியிடும் அளவுக்கு டிஜிட்டல் பணம் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் தனியார் கிரிப்டோகரன்சிகள் நாட்டின் கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்துக்கே பெரிய அச்சுறுத்தலாக உள்ளதை உணர்ந்ததால்தான் டிஜிட்டல் பணம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் பேசினார். ரிசர்வ் வங்கி செய்து வரும் சோதனையில் சரியான தொழில்நுட்பம் இருக்கவேண்டும் என்றும் சங்கர் தெரிவித்தார். விரைவில் ஸ்மார்ட் பாண்ட்கள் உள்ளிட்டவற்றை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டு இருப்பதாக கூறிய அவர், யுபிஐ திட்டத்தின் சந்தை உச்சவரம்புக்கான கால வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார். இந்தியாவில் 3-ம் தரப்பு செயலிகள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் சந்தையில் போட்டிபோடவும் நிச்சயம் கால அவகாசம் தேவைப்படும் என்றும் சங்கர் தெரிவித்தார். தற்போது வரை யுபிஐ நுட்பத்தை 3-ம் தரப்பு செயலிகள் பயன்படுத்தும் வசதி இலவசமாக உள்ளது. இதே நிலை வரும் டிசம்பர் 31,2024 வரை நீட்டிக்கப்பட உள்ளது.