மாதத்தவணை எவ்வளவு உயரும் தெரியுமா???
இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி இருப்பதால் வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களின் மீதான வட்டி விகிதமும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கை ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0. 35 சதவீதம் அதிகரிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். இந்த வட்டி விகித உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் காரணமாக வீட்டுக் கடன், வாகன கடன் போன்ற கடன்களின் மீதான வட்டி விகிதம் உயரும். உதாரணமாக கடந்த ஏப்ரல் மாதம், ஒருவர் 30 லட்சம் ரூபாய், 20 ஆண்டுகளுக்கு, வீட்டுக் கடன் பெற்று இருந்தால், ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது நான்காயிரத்து நூறு ரூபாய் கூடுதலாக மாதத்தவனை செலுத்த வேண்டி இருக்கும்.இது கடந்த எட்டு மாதங்களாக அடுத்தடுத்து ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்ததன் காரணமாக ஏற்பட்ட விளைவு என்பது கவனிக்கத்தக்கது. இந்தத் தொகை நபருக்கு நபர், அவர்கள் வாங்கியிருக்கும் கடன் மற்றும் கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அளவைப் பொறுத்து மாறுபடும் என்பதும் கவனிக்கத்தக்கது. விலைவாசியை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.