அந்த நிறுவனத்திலும் ஆட்குறைப்பா??!!!!
உலகளவில் பெரிய வங்கி நிறுவனங்களில் ஒன்றாக மார்கன் ஸ்டான்லி உள்ளதுஇந்த நிறுவனத்தில் 2% பணியாளர்களை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளது இதன் மூலம் மொத்தம் ஆயிரத்து 600 பேர் பாதிக்கப்பட இருக்கின்றனர்.81 ஆயிரம் பணியாளர்கள் உலகளவில் இந்த வங்கியில் பணியாற்றி வருகின்றனர்.உலகளவில் பணத்தை சிறந்த வகையில் முதலீடு செய்வதில் மார்கன் ஸ்டான்லி நிறுவனம் தனித்துவமான அடையாளம் கொண்டுள்ளது. இந்த சூழலில் 3-வது காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் 47%ஆக உயர்ந்து உள்ளது. தற்போது 2% பணியாளர்கள் குறைவதால் அவர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் மிச்சமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.