ஐபோன் யூஸ் பண்றவங்க எப்பவுமே ஸ்பெசல் தான்!!!!
டிவிட்டரை பெரிய தொகை கொடுத்து எலான் மஸ்க் வாங்கிவிட்ட நிலையில், அதனை லாபகரமாக மாற்ற மஸ்க் புதிய திட்டங்களை வகுத்து வருகிறார். இந்த சூழலில் 8 டாலர் பணம் கொடுத்தால் அனைத்து தரப்பினருக்கும் புளூ டிக் தரப்படும் என்று எலான் மஸ்க் திட்டம் வகுத்திருந்தார். ஆனால் ஆப்பிள் செல்போன்களை பயன்படுத்திவிட்டு அதில் டிவிட்டரை பயன்படுத்துவோருக்கு மாதம் 11 டாலர் கட்டணம் நிர்ணயிக்க மஸ்க் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே ஆப்பிள் 30% வரியை மறைமுகமாக விதிப்பதாக கதறிய எலான் மஸ்க், பின்னர் ஆப்பிள் நிறுவன தலைவரை சந்தித்து மறைமுக வரி ஏதும் இல்லை என்று கம்பி கட்டினார். இந்த நிலையில் 8 டாலரில் இருந்து 11 டாலர்களாக கட்டணத்தை மஸ்க் உயர்த்த திட்டமிட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் இருந்து மேலும் பயனாளர்களை வெளியேற வைக்கும் என்றே நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அப்படி என்னதான் சிறப்பு அம்சங்கள் புளூடிக்கில் தரப்போகிறார் என்று உலகமே உற்று நோக்கி வருகிறது. ஆப்பிளும்,ஆண்டிராய்டிலும் இருந்து டிவிட்டர் நீக்கப்பட்டால் மாற்றாக புதிய செல்போனையே உருவாக்குவேன் என்று மஸ்க் கூறியிருந்த நிலையில், யானைவாங்கிவிட்டு அங்குசம் வாங்க பணம் இல்லை என்று சிலர் மஸ்க்கின் செயலை விமர்சித்து வருகின்றனர்.