35,000 கோடி மிச்சமா? ஆனா யாருக்கு லாபம்???
இந்தியாவும் அமெரிக்காவும் தோஸ்த் என்றால், ரஷ்யாவும் இந்தியாவும் செம நெருக்கமான நண்பேன்டா நாடுகள். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் போர் ஏற்பட்டாலும் கூட நண்பனுக்கு சரியான அறிவுறுத்தல் தரும் இந்தியா, யாரையும் பகைத்துக் கொள்ளாமல், என் நாட்டு மக்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் நண்பனிடம் பெற்றுக்கொள்கிறேன் என்ற கில்லாடி திறமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த சூழலில் ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெயை வாங்கியதன் மூலம் இந்தியாவுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் லாபமாக கிடைத்துள்ளது. ரஷ்யாவிடம் குறைந்த விலையில் இந்தியாவும், பங்காளி நாடான சீனாவும் அதிகம் கச்சா எண்ணெயை வாங்கு குவித்துவிட்டனர். இதனால் ஏற்கனவே அமெரிக்கா கடுப்பில் உள்ளது. கடந்த நிதியாண்டில் வெறும் 2%மட்டுமே இறக்குமதி செய்த இந்தியா தற்போது ரஷ்யாவிடம் இருந்து 16 % கச்சா எண்ணெயை வாங்கிக் குவித்துள்ளது. நவம்பர் மாதத்தில் மட்டும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா 9 லட்சத்து 9 ஆயிரத்து 400 பேரல்களை ஒரு நாளில் வாங்கி வருகிறது.இது கடந்த சில மாதங்களில் இல்லாத அளவாக 40% உயர்ந்துள்ளது.
ரஷ்யா கச்சா எண்ணெய்க்கு ஜி7 நாடுகள் விலை நிர்ணயம் செய்துள்ளதால் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.