நிஜமாதான் சொல்றியா!!????
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா தனது 100வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் சூழலில், அடுத்த கால் நூற்றாண்டுக்குத் தேவையான ரயில்வே கட்டமைப்பை மத்திய அரசு தீவிர கவனத்துடன் கையாண்டு வருகிறது.
வரும் பட்ஜெட்டில் 1 லட்சம் கிலோமீட்டர் புதிய ரயில்வே பாதைகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. புதிய ரயில் பாதைகள் ரயில்வேவை நவீனப்படுத்துவதுடன், வேகத்தை அதிகரிக்கவும் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகல ரயில்பாதையில் 7 ஆயிரம் கிலோமீட்டரை மின்மயமாக்கும் திட்டத்துக்கு ரூபாய் 10 ஆயிரம் கோடி ஒதுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 2024ம் நிதியாண்டில் இந்த பணிகளை முடிக்கவும் அரசு திட்டமிட்டு இருக்கிறது. வரும் 2024ம் ஆண்டுக்கு பிறகு பல கட்டங்களாக இந்த பணிகள் நடத்தப்பட இருக்கிறது. புதிய ரயில் பாதைகளை உருவாக்க 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட இருக்கிறது. 1 லட்சம் கிலோமீட்டர் தொலைவுக்கு தண்டவாளத்தை அமைக்க 15 முதல் 20 டிரில்லியன் ரூபாய் செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதிவேகம் இயங்கும் வந்தே பாரத் ரயில்களை விரிவுபடுத்த இந்த விரிவாக்க பணிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. வரும் பட்ஜெட்டில் 300-400 வந்தே பாரத் ரயில்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சரக்கு போக்குவரத்து மூலம் வரும் வளர்ச்சி 8.5-10%வரை உள்ளதை வருங்காலங்களில் ஆண்டுக்கு 12 முதல் 14%ஆக உயர்த்த அரசு திட்டம் வகுத்து வருகிறது. 2021-22நிதியாண்டில் மட்டும் ரயில்வே வருவாய் 11 % உயர்ந்தது, கடந்தாண்டு நவம்பர் மாதம் ரயில்வேவின் சரக்கு வருவாய் 12 ஆயிரத்து 206 கோடியாக இருந்தது. இந்தாண்டு நவம்பரில் இதே துறை வருவாய் 13 ஆயிரத்து 560 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.