போலிஸ கூப்புடுவேன்!!!! என்னமா இப்பிடி பண்றியேமா லெவலுக்கு மஸ்க் செய்யும் வேலை!!!!
பத்துபேர் ஒரு கூட்டமா நண்பர்களா இருப்பாங்கன்னா அதுல ஒரு ஓட்டவாயன் இருப்பான்னு சொல்லுவாங்களே அப்படித்தான் டிவிட்டரிலும் சிலர் இருக்கிறார்கள் என மஸ்க் நொந்து கொண்டுள்ளார். பல லட்சம் கோடி ரூபாய் கொடுத்து அண்மையில் டிவிட்டரை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். ஆனால் உள்ளே என்ன நடந்தாலும் அதனை உடனுக்குடன் யார் பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்கிறீர்கள் என மஸ்க் தனது ஊழியர்களை திட்டித்தீர்த்துள்ளார். முதல் முறையாக அன்பாக சொல்லுவதாக எச்சரித்துள்ள எலான் மஸ்க் , டிவிட்டரில் நடப்பவற்றை வெளியே கசிய விடுவோரை நீதிமன்றத்தில் நிறுத்துவேன் என்றும் தனது ஊழியர்களை மஸ்க் மிரட்டியுள்ளார். டிவிட்டரில் வேலை செய்வோருக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், கருத்து சுதந்திரம் குறித்து கூச்சலிடம் மஸ்க் சொந்த அலுவலகத்திலேயே கருத்து சுதந்திரம் இல்லாமல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா என்றும் ஒரு குழுவினர் மஸ்க்கை கலாய்த்து வருகின்றனர்.