இந்தியா என் நண்பேண்டா…!!!!
ஒரு கோடிப்பே என்ற நகைச்சுவை வசனம் அண்மை காலங்களில் பிரபலமான வசனமாகும். இந்த நிலையில் இதே பாணியில் இந்தியாவுக்கு மட்டும் மலிவு விலையில் கச்சா எண்ணெய் தரும் ரஷ்யா எங்களுக்கும் தருகிறது என ஒரு கோடிப்பே ஸ்டைலில் பாகிஸ்தான் தம்பட்டம் அடித்து வந்தது. ஆனால் இந்தியா அதிகம் கச்சா எண்ணெய் வாங்குவதால் அவர்களுக்கு அதிக சலுகைகள் தருகிறோம் என ரஷ்யா தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் ரஷ்யாவுக்கும் -பாகிஸ்தானுக்கும் இடையேயுள்ள குழாய் வழி எரிவாயு திட்டமும் போதிய வரவேற்பை பெறவில்லை. இந்த சூழலில் இந்திய அரசு எடுக்கும் முயற்சிகளை காப்பி அடிப்பதில் பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருகிறது. ஈரானில் இருந்து ஐரோப்பிய ஆசிய நாடுகளுக்கு இணைக்கும் வகையில் INSTC(-சர்வதேச வடக்கு கிழக்கு போக்குவரத்து வழித்தடம்) இந்தியா அமைத்து வருகிறது. 7 ஆயிரத்து 200 கிலோமீட்டர் தூரம் உள்ள தொழில்வழித்தடத்தின் மூலம் இந்தியா ஈரான், அஜர்பைஜான்,ரஷ்யா,மத்திய ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளை இணைக்க முடியும். இந்த வழித்தடத்தின் மூலம் ரயில்,கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து மேம்படுத்தப்பட்டு வணிகம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா தீவிரம் காட்டி வரும் நிலையில் வேண்டுமென்றே ரஷியாவிடம் சென்று பாகிஸ்தான் மல்லுகட்டி நிற்கிறது. இந்தியாவுக்கு கொடுத்த அதே விலையில் எங்களுக்கும் எரிபொருள் தரவேண்டும் என்றும் பாகிஸ்தான் வலியுறுத்தியது. ஆனால் பாகிஸ்தானின் கோரிக்கையை ரஷ்யா நிராகரித்து இந்தியாவின் உற்ற தோழன் ரஷ்யா என்று நிரூபித்துள்ளது.