காரை அறிமுகம் செய்கிறதா பஜாஜ்???
பஜாஜ் நிறுவனம் பைக்குகளுக்கு இந்தியாவில் பெயர்பெற்றதாக உள்ளது.திடீரென ஏன் பஜாஜ் பற்றி பேசுகிறோம் என நினைக்க வேண்டாம், விஷயம் இருக்கிறது. வியாபாரத்தில் ஜாம்பவானாக உள்ள பஜாஜ் குழுமம் அடுத்ததாக மின்சார கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிரவ் பஜாஜ் என்பவர்தான் பஜாஜ் குழுமத்தின் மூத்தவராக உள்ளார். அவர் தலைமையில்தான் பல்வேறு வணிகங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் அதே குடும்பத்தைச் சேர்ந்த ராஜிவ் மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் இணைந்து கார் உற்பத்தி வியாபாரத்துக்கு நிதியை முதலீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது, மாருதி சுசுக்கி நிறுவனத்தில் பணியாற்றியிருந்த கவ்ஷிக் கங்குலி, பஜாஜ் நிறுவனத்தின் புதிய கார் பிரிவை நிர்வகிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் அபுதாபியைச் சேர்ந்த ADIA என்ற நிறுவனம் லென்ஸ்கார்ட் நிறுவனத்தில் 400மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. மேரிகோ நிறுவனம் வியட்நாமைச் சேர்ந்த பியூட்டி எக்ஸ் என்ற நிறுவனத்தை 172 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளனர், இந்த நிறுவனம் குளியல் மற்றும் அழகு சாதன பொருட்களை உற்பத்தி செய்ய இருக்கின்றன. பணம் மட்டுமே சம்பாதித்தால் போதுமா இல்லை கொஞ்சம் பொதுநலனும் வேண்டுமல்லவா, அதற்கும் எங்களிடம் தகவல் இருக்கிறது. கவலை வேண்டாம். பல்லுயர்கள் காக்க வேண்டிய அவசியம் குறித்து கனடாவில், 200 நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். கனடாவில் உள்ள மான்ட்ரியல் நகரில் இது தொடர்பான கூட்டம் நடக்க இருக்கிறது