ஒன்லி 10 லட்சம் கோடியை தள்ளுபடி செஞ்சுருக்காங்க!!!
கடந்த 5 ஆண்டுகளில் வாராக்கடனாக 10 லட்சம் கோடி ரூபாயை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அம்மையார் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வங்கிகளில் கடன் பெற்று பல முறை நினைவூட்டியும் திரும்ப செலுத்தாமல் கடந்த 5 ஆண்டுகளாக மட்டும் 10 லட்சத்து 09ஆயிரத்து 511 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சர் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். கொடுத்த கடன்களை வாராக்கடன் என்று கூறி முழுமையாக தள்ளிவிடமுடியாது என்று கூறியுள்ள அமைச்சர், சில நிறுவனங்களிடம் இருந்து கடன்களையும், கடன்களுக்கு நிகரான சொத்துகளையும் பறிமுதல் செய்யும் பணிகள் நடப்பதாக கூறியிருக்கிறார். வாராக்கடன்கள் வைத்துள்ள கணக்குகளின் உரிமையாளர்களிடம் இருந்து மட்டும் மொத்தம் 6 லட்சத்து 59 ஆயிரத்து 596 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்திருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடன்கள் திருப்பி செலுத்தாதவர்களிடம் இருந்து சட்டப்படி பணத்தை பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். தற்போதுள்ள தொழில்நுட்பத்துக்கு மாற்றாக பிளாக்செயின் தொழில்நுட்பத்தை ரிசர்வ் வங்கி செய்து வருவதாகவும் நதியமைச்சர் தெரிவித்திருக்கிறார்.