எஸ் பேங்க் மதிப்பு உயர்வு!!!
இந்திய பங்குச்சந்தைகள் புதன்கிழமை எஸ் பேங்க் நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. அந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக carlyle-ஐ நியமித்துள்ளதை அடுத்து, அந்த நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. அந்த வங்கியின் கடன் அளிக்கும் விகிதம் அதிகரித்துள்ளதை அடுத்து பங்குச்சந்தைகளில் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. 2020-ல் சரிவை சந்தித்த எஸ் பேங்க், கடந்தாண்டு 62% உயர்ந்துள்ளது. அடுத்த 3 மாதங்களில் லாக்கின் காலம் வர உள்ளதை அடுத்து அந்த நிறுவன பங்குகள் உயரும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எஸ் வங்கியின் பங்குகள் உயர்ந்திருப்பதால் மும்பை பங்குச்சந்தையில் இதன் விலை 22 ரூபாய் 65 காசுகளாக இருக்கிறது பெரும் சிக்கலை சந்தித்த எஸ் வங்கியின் நிதிநிலையை சீரமைக்க போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருவதால் எஸ் வங்கியின் பங்குகள் வரும் நாட்களில் உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. வாராக்கடன் திரும்ப மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதால் எஸ் வங்கியின் பங்குகள் அதிகம் ஈடுபட்டுள்ளதால் சந்தையில் தற்போது வாங்குவோருக்கு உகந்த நேரமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.