உலகளவில் தலைவலியை ஏற்படுத்திய பெடரல் ரிசர்வின் முடிவு!!!!
அமெரிக்க டாலரை மையப்படுத்தியே தங்கம் முதல் கச்சா எண்ணெய் முதல் விற்கப்படும் நிலையில், அமெரிக்காவில் நிலவும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அந்நாட்டு மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது 50 அடிப்படை புள்ளிகளை கடன்களுக்கு பெடரல் ரிசர்வ் உயர்த்தியுள்ளது. இதனால் அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத வகையில் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்துள்ளது விலைவாசியை கட்டுப்படுத்த அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் 2024ம் ஆண்டுவரை தொடர்ந்து வட்டியை உயர்த்திக்கொண்டேதான் இருக்கும் என்பதால் வணிகர்கள் கவலை அடைந்துள்ளனர்
கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளபோதும், கடன்களின் விலை ஏற்றுவது விலைவாசியை குறைக்கவே என பெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பாவல் விளக்கமளித்ததும், பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது
அடுத்தாண்டு வளர்ச்சி விகிதம் குறைவாக இருக்கும் என அமெரிக்க நிபுணர்கள் கணித்துள்ளதை அடுத்தே பெடரல் ரிசர்வ் இந்த அதிரடி முடிவுகளை எடுத்துள்ளன அமெரிக்க பொருளாதாரம் விழ 3 பிரதான காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. பெருந்தொற்று நேரத்தில் ஏற்பட்ட உணவு தட்டுப்பாடு மற்றும் ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் மற்றும் போதிய நிதி இல்லாமை ஆகியவைதான் காரணமாக கருதப்படுகிறது.