ஆட்டம் போட்ட தங்கம் விலை சற்று குறைந்தது!!!!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயும், டாலர் விலையும் உயரும் போது அதற்கு மாற்றாக ஒரு பொருள் ஏற்றம் காணும் என்றால் அது தங்கம் மட்டுமே. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வரும் காலத்தில், வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளதன் காரணமாக அமெரிக்காவில் டாலர் மதிப்பு வலுபெற்றது. இந்த நிலையில் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை ஊசலாட்டம் காணப்பட்டது, கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் பெற்ற தங்கத்தின் விலை, அமெரிக்க பெடரல் ரிசர்வின் நடவடிக்கைகளால் புதன்கிழமை விலை குறைந்தது
அதாவது 55ஆயிரம் ரூபாயாக இருந்த 10 கிராம் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சற்று சரிந்து, 54 ஆயிரத்து 352 ரூபாயாக குறைந்துள்ளது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சந்தைகளுக்கு தகுந்தபடி முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடுகளை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் எனினும் சந்தை ஊசலாட்டத்துடனே இருக்கும் என்பதால் தங்கம் விலையிலும் திடீர் திடீர் ஏற்ற இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.