சீக்கிரம் ரோடு போட்டு 3 லட்சம் கோடி மிச்சமாக்கி இருக்கோம்:நிதின் கட்கரி
இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டில் இருந்து இதுவரை நிலுவையில் உள்ள அனைத்துசாலைகளையும் சரியான நேரத்தில் போட்டு 3 லட்சம் கோடி ரூபாய் தேவையில்லாத செலவை இந்திய வங்கிகளுக்கு மிச்சப்படுத்தி உள்ளதாக நிதின்கட்கரி தெரிவித்துள்ளார் இது தொடர்பாக மாநிலங்களவையில் புள்ளி விவரங்களை அவர் பட்டியலிட்டார். அதன்படி மொத்தம் 415 சாலை திட்டங்களில் 95% பணிகள் முடிந்துள்ளதாகவும்,விரைவில் மாநில வாரியிலான கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்படும் என்றார் பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை பாஜக ஆட்சிக்கு வந்த 8 ஆண்டுகளில் முடித்துள்ளதாக கூறியுள்ளார். நாடு முழுவதும் 719 சாலை திட்டங்கள் நிலுவையில் கிடப்பதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைகளை மீண்டும் போடும்போது அதற்கு தேவையான அனைத்து பணிகளையும் அரசு செய்து வருவதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் வேண்டுமென்றே காலதாமதம் செய்யும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.