ரயில்வேவுக்கு அதிக செலவாகுதுப்பா…
ரயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு,கட்டணத்தில் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. பெருந்தொற்று ஆரம்பமானபோது நிறுத்தப்பட்ட சலுகைகள் இதுவரை திரும்பத் தரப்படவில்லை.
இதுபற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுபப்பட்டது.இதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார். இதில் இந்திய ரயில்வேயில் 59 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பயணிகளுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஊழியர்களுக்கான பென்சன் மற்றும் சம்பளம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஒரு வருடத்துக்கு ரயில்வேயில் ஊழியர்களுக்கு சம்பளம் மட்டுமே 97ஆயிரம் கோடி ரூபாயாகவும், ஓய்வூதிய திட்டத்துக்கு 60,000 கோடி ரூபாயும்,எரிபொருளுக்கு 40ஆயிரம் கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது தற்போது வந்தே பாரத் ரயில்களில் 500 கிலோமீட்டர் தூரம் வரை அமர்ந்தபடி பயணிக்கும் வசதி உள்ளதாகவும், விரைவில் படுத்து தூங்கியபடி பயணம் செய்யும் பெட்டிகள் அறிமுகமாக இருப்பதாகவும் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார் மேலும் நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்து அயோத்தியாவுக்கு ரயில் மூலம் இணைக்கும் வசதி கிடைக்க இருப்பதாகவும், ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும்போது இந்த சேவை கிடைத்துவிடும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார் மேலும் நாட்டில் 41 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கும் பணி நடைபெறுவதாகவும், விரைவில் அனைத்து ரயில்நிலையங்களும் படிப்படியாக புதுப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் தெரிவித்துள்ளார். தற்போது ரயில்வேவை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், நிலைமை சீரடைய வேண்டும் என்றும் தெரிவித்தாரே தவிற, எப்போது மீண்டும் மூத்த குடிமக்களுக்கு மானிய சலுகைகள் கிடைக்கும் என அறிவிக்க மறுத்துவிட்டார்.